series-3

                                                                       SERIES-3

   






5.திருக்கச்சி

    
        திருக்கச்சி என்ற இத்தலம் செங்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் உள்ளது. செங்கப்பட்டிலிருந்து அரக்கோணம் வழியாகச் செல்லும் இரயில் மூலமாகவும் சென்னை – காஞ்சிபுரம், செங்கல்பட்டு – காஞ்சிபுரம் வழியாகவும் இத்தலத்திற்கு பேருந்துகள் மூலமாகவும் செல்லலாம்.இங்குள்ள கோயிலின் மூலவர் வரதராஜப் பெருமாள் ஆவார். நின்ற கோலத்தில் அபயகரம் கொண்டு காட்சி தருகின்றார். தாயாரின் பெயர் பெருந்தேவித் தாயார் ஆகும். மஹாலட்சுமிக்குத் தனி சந்நிதி உண்டு. திருமழிசை ஆழ்வார் இரண்டு பாசுரங்களாலும், திருமங்கை ஆழ்வார் நான்கு பாசுரங்களாலும், பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும் இக்கோயிலில் மங்களாசாசனம் செய்துள்ளனர்.கோயிலின் புஷ்கரணி கல்யாண தீர்த்தம், வராக தீர்த்தம் ஆகியவை ஆகும். திருமங்கை ஆழ்வார் மூன்று பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். இக்கோயிலில் உள்ள விமானம் கல்யாண விமானம் ஆகும்.

        
    வேதகரியை உத்திரவேதியாக வைத்து அஸ்வமேத யாகம் செய்தார். அப்போது யோக நரசிம்மர் எழுந்தருளி எம்பெருமானிடம் வரம் அளித்தார். அதனால் இக்கோயில் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.கோயிலுக்குள் இருக்கும் கூகை விமானத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் யோக நரசிம்மரே முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.ஆறுகால் மண்டபத்திற்கு வடபுறமாக அமைந்துள்ள பகுதியில்தான் ஆதிசேஷன் தவம் புரிந்த இடமாகக் கூறப்படுகின்றது. இதன் அருகில் நீராழி மண்டபம் ஒன்று உள்ளது.அம்மண்டபத்தின் பகுதியிலிருக்கும் மாடத்தில் அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதப் பெருமாள் சயனத்தில் உள்ளார். நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை சேஷ தீர்த்தத்தில் உள்ள நீரினை வெளியேற்றி அத்திவரதரை கோவிலுக்கு கொண்டு வந்து ஒரு மண்டல பூஜை புனஸ்காரங்கள் அனைத்தும் செய்து மீண்டும் மாடத்தில் வைத்து சேஷ தீர்த்த ஜலத்தினை நிரப்பி விடுகின்றனர்.இக்கோயிலில் புஷ்கரணி, வேகவதி தீர்த்தம், சேஷ தீர்த்தம், வராக தீர்த்தம் ஆகியவை உள்ளன.


                

        நாறுகால் மண்டபத்தில் நான்கு புறத்திலும் வெகு நுட்பமாக அமைக்கப்பட்ட கல் சங்கிலிகள் தொங்குகின்றன. இங்கு குதிரைகள், குதிரை வீரர்கள், யாழிகள், ரதி, மன்மதன் சிலைகள் அழகுடன் திகழ்கின்றன. அருகிலேயே ரம்யமான நந்தவனமும் உண்டு.தமிழ் இலக்கியங்களில் இத்தலத்தை காஞ்சி, காஞ்சிபுரம், திருக்கச்சி என்றும் கச்சிப் பேடு என்றும் கூறப்பட்டுள்ளது.


6.திருக்காரகம்

                
    செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரத்தில் இத்தலம் உள்ளது. இத்தலமானது திருஊரகத்தின் பிரகாரத்திலேயே உள்ளது.இக்கோயிலின் மூலவர் **கருணாகரப் பெருமாள்** ஆவார். மூலவர் நின்ற நிலையில் தென் திசை நோக்கியவாறு இருக்கின்றார். தாயார் **பத்மாமணி நாச்சியார்** ஆவார். இங்கு திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் ஒரு பாசுரத்தின் வாயிலாக செய்துள்ளார். கடலில் இருக்கும் உப்பு நீரானது கருமேகமாகி குளிர்ந்த மழையாகப் பொழிந்து இவ்வுலகை வளமாக்குகின்றது. கார் மேகங்கள் இல்லாது மழை பெய்யாவிட்டால் உலகமானது வறட்சியாகி அழிந்து போய்விடும். அதுபோல கார் மேகத்தைத் தன் நிறமாகக் கொண்ட எம்பிரான் கருணாகரப் பெருமானின் அருள் கிடைத்திடாது போனால் உலக உயிர்கள் துன்பமுற்று அவதியுறுவர்.

            
    பெருமாள் பத்மாமணி நாச்சியாருடன் நின்ற கோலத்தில் சேவை தந்தருளுகின்றார்.இக்கோயிலில் உள்ள புஷ்கரணியின் பெயர் **அக்ராய தீர்த்தம்** ஆகும். கோபுர விமானம் **வாமன விமானம்** ஆகும். விமானம் ரம்யமாகக் காட்சியளிப்பதால் தாயாரும் **ரமாமணி நாச்சியார்** என்ற பெயரையும் பெற்றார்.


7. திருஊரகம்

            
    இத்தலமும் காஞ்சிபுரத்தில் அமையப் பெற்றதாகும். மூலவரின் திருநாமம் **உலகளந்த பெருமாள்** ஆவார். உலகை அளந்திடும் நடந்த கோலத்தில் மேற்கு திசை நோக்கியபடி சேவை தருகின்றார். தாயாரின் பெயர் **அமிர்தவல்லி** ஆகும்.

திருமங்கை ஆழ்வார் நான்கு பாசுரங்களாலும், திருமழிசை ஆழ்வார் இரண்டு பாசுரங்களாலும் இக்கோவிலில் மங்களாசாசனம் செய்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் தை மாதத்தில் (ஜனவரியில்) இக்கோயில் திருவிழா பெரிய அளவில் நடக்கின்றது.இக்கோயிலில் நாக தீர்த்தம், சேஷ தீர்த்தம் ஆகியவை புஷ்கரணியாகும். கோபுர விமானம் **ஸ்ரீகர விமானம்** ஆகும்.உயர் பதவியை வேண்டி மகாபலி தேவேந்திர பதவியை அடைந்திட ஒரு மாபெரும் யாகம் நடத்தினார். யாகத்தின் போது எம்பெருமான் வாமன அவதாரம் கொண்டு. .மூன்றடி மண் பெற்றார். பின் திரிவிக்கிரமனராகப் பெரிய உருவெடுத்து உலகினை இரண்டு அடிகளில் அளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவருக்கு பாதாள வாழ்வை அளித்ததாகக் கூறப்படுகிறது.ஆதிசேஷனுக்கு இப்பெருமான் காட்சி தந்தருளியதாகவும் கூறுகின்றனர். தலபுராணத்தில் குறிப்பிடப்பட்ட புஷ்கரணியும், விமானமும் தற்போது காணப்படவில்லை. இருந்தபோதிலும் இக்கோவிலில் உள்ள தீர்த்தங்கள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடியவையாக உள்ளன.







Comments

Popular posts from this blog

When Dance Becomes Story: The Soul of Abhinaya in Bharatanatyam”

108 திவ்யஸ்தலம் SERIES-1

Karunai – The Rasa of Kindness, Sorrow, and Humanity