அஷ்ட்டவித நாயகிகள்(விரகோத்கண்டித்தா)

 

                                                              

                                                 அஷ்ட்டவித நாயகிகள்

                                              (WRITINGS OF K.SURYA PRIYA)

                                                    விரகோத்கண்டித்தா     

            அஷ்ட்டவித நாயகிகள் என்பது எட்டு விதமான நாயகிகள் ஆகும். இது இலக்கியம், ஓவியம்,நாடகம், நாட்டியத்தில் உள்ள பெண் கதாபாத்திரம் அவளின் குணநலம் மற்றும் அவளின் உணர்வுகளை பார்வையாளர்களுக்கு தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டது.அஷ்ட்டவித நாயகிகள் பற்றியும் அவளின் குணங்களை பற்றியும் பரதமுனி தனது நாட்டியசாஸ்திரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். இக்கட்டுரையில் விரகோத்கண்டித்தா நாயகி மற்றும் அவள் குணநலன் அவளின் குணநலன் காணப்படும் பதம்,புத்தகம்,மற்றும் தமிழ் திரைப்படம் இவை மூன்றிலும் கண்டுடெக்கப்பட்டு இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது 

        இவள் அஷ்ட்டவிதநாயகிகளில் இரண்டாம் நாயகி ஆவாள் . இவளது தலைவன் அவளைவிட்டு பிரிந்து சென்ற வலியினாலும் மற்றும் அவளைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டான் என்ற ஏக்கத்தினாலும் அவன் மீது கொண்ட காதலினாலும் துன்பத்துடன் இருப்பாள். தலைவன் தன் வியாபார வேலையாகவோ அல்லது மற்ற வேலைக்காகவோ எங்கோ சென்றிருப்பான் அவன் வராத காரணத்தினால் காதலோடு அவன் என்று வருவான் எங்கிருப்பான் எப்படி இருப்பான் என்று காத்திருப்பாள்.தோழியிடம் தன் ஞாபகங்களை பகிர்ந்து கொண்டு பின்பு அவன் என்று வருவான் எப்படி வருவான் என்று யோசித்து அவனை எதிர் பார்த்து இருப்பாள்.

                 இந்நேரம் வருவாரென்று சொன்னவள் நீதானே என்ற பரதநாட்டியத்தில் உள்ள பதம் இதில் தலைவி தோழியிடம் இந்நேரம் வருவாரென்று சொன்னாய் குறித்த நேரத்தில் அவர் வரவில்லை என்று கேள்வி எழுப்புவாள் இதில் முருகப்பெருமானை பாட்டுடை தலைவனாக கொண்டு எழுதப்பட்ட பதம் இதில் அவர் தன்னை அன்னம் என்றும் கனிமொழி என்றும் அழைப்பார் அனால் குறித்த நேரத்தில் வரவில்லை என்று தன் கவலையை கூறி தோழியிடம் பேசுவாள் பின்பு தலைவனின் வருகைக்காக காத்திருப்பேன் என்று கூறுவாள்.

                    அடுத்தது paulo coehlo வின் ரஸவாதி (THE ALCHEMIST ) இதில் பாத்திமா என்னும் பெண் பாலை நிலத்தை சார்ந்தவள். இவளின் காதலன் அவளிடம் தன் கனவுகளை பற்றி கூறுகையில் அவனிடம் இவள் அவனுடைய புதையலை தேடி செல்ல அறிவுரை கூறுவாள் . மேலும் அவள் தான் ஒரு பாலைநிலத்து பெண் தன்னுடைய விதி தன் தலைவனுக்கு காத்திருப்பதே என்று கூறுவாள் ஆனால் அவன் புதையல் தேடி செல்ல இருக்கிறேன் என்று சொல்லும்போது கவலை கொள்ளுவாள் . அவனுக்காக ஏங்குவாள் தன் காதலன் பத்திரமாக பயணம் சென்று திரும்ப வேண்டும் என்று பாலை கடவுளை வேண்டுவாள். எதை பற்றியும் யோசிக்காமல் தன் கணவனுக்காக காத்திருப்பாள்.

            அடுத்ததாக தமிழ் திரைப்படம் நீர்ப்பறவை இதில் கதாநாயகன் மீன் பிடிக்க கடலுக்குள் சென்று பலவருடம் வீடு திரும்பாமல் இருப்பான் கதாநாயகி அவனுக்காகவே காத்திருந்து கடைசி வரை அவன் வராமல் இருக்க காத்திருப்பில் இவள் தன் உயிரை விட்டுவிடுவாள் இதில் நிலம் சார்ந்தும் அப்பெண்ணின் மனநிலை குறிக்கப்படுகிறது நெய்தல் நிலத்தில் தன் கண்டிப்பாக தலைவன் கடலுக்குள் சென்று தான் பொருள் ஈட்டும் சூழல் அமையும், அதுபோல பாலை நிலத்திலும் அப்படி தான் சூழல் அமையும் அதனால் ஒரு பெண்ணின் உணர்ச்சி நிலம் சார்ந்ததாகவும் இருக்கும் .


                                                                                                                            BY

                                                                                                                   K.SURYA PRIYA

                                                                                                        BAJRANG NARTHANALAYA

                  

Comments

Popular posts from this blog

When Dance Becomes Story: The Soul of Abhinaya in Bharatanatyam”

108 திவ்யஸ்தலம் SERIES-1

Karunai – The Rasa of Kindness, Sorrow, and Humanity